இனிப்பு வகைகள் என்றாலே
குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருமே விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் இந்த வெயில் காலத்திற்கு ஏற்ற ஒரு சூப்பரான ஸ்வீட் ரெசிபியை நல்லா குளுகுளுன்னு செஞ்சி சாப்டா எப்படி இருக்கும். இப்படி யோசிக்கும் போதே செமையா இருக்கு இல்ல. வாங்க அப்படி ஒரு சூப்பரான ஸ்வீட் ரெசிபியை எப்படி செய்வது என்பதை இந்த சமையல் குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
பிரட் ஸ்வீட் ரசமலாய் செய்முறை விளக்கம்: (Bread Rasmalai Recipe in Tamil) இந்த ஸ்வீட் ரெசிபியை செய்வதற்கு முதலில் ஒரு பாக்கெட் கிரீமீ மில்க் எடுத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக அடுப்பில் அடி கனமான ஒரு பாத்திரத்தை வைத்து அதில் பாலை ஊற்றி முதலில் ஹை ஃபிளேமில் நன்றாக கொதிக்க விடுங்கள்.
அதன் பிறகு அடுப்பை லோ ஃபிலிமில் வைத்து விட்டு பாலை நன்றாக சுண்ட காய்ச்ச வேண்டும். இந்த நேரத்தில் ஒரு கிண்ணத்தில் இரண்டு டேபிள் ஸ்பூன் கான்பிளவர் மாவு எடுத்து கொஞ்சமாக கொதித்துக் கொண்டிருக்கும் பாலை அதில் ஊற்றி கட்டிகள் இல்லாமல் கலந்த பிறகு, கொதித்துக் கொண்டிருக்கும் பாலில் ஊற்றி கை விடாமல் கிளறுங்கள். இத்துடன் நிறத்திற்கு ஒரே ஒரு சிட்டிகை மஞ்சள் சேர்த்து கிளறி கொண்டே இருங்கள். (குங்குமப்பூ இருந்தால் ஊற வைத்து சேர்த்தால் நிறத்துடன் சுவையும் நன்றாக இருக்கும்).
இப்போது இதில் இனிப்பிற்கு நான்கு டேபிள் ஸ்பூன் சர்க்கரை சேர்த்துக் கொள்ளுங்கள். இத்துடன் கால் டீஸ்பூன் ஏலக்காய் பவுடரையும் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்த ரசமலாய் மேலும் சுவையூட்ட உங்களிடம் இருக்கும் நட்ஸ் வகைகள் பாதாம், பிஸ்தா, முந்திரி என எது இருந்தாலும் அதை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி அதையும் இதில் சேர்த்து நன்றாக கலக்கி பால் கெட்டியான பதத்திற்கு வந்தவுடன் அடுப்பை விடுங்கள்.இப்போது ஆறு பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை நறுக்கி எடுத்து விடுங்கள். ஒரு பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி பௌலில் முதலில் இந்த பிரட் துண்டுகளை சின்ன சின்னதாக வட்டமாக நறுக்கி அடுக்கிக் கொள்ளுங்கள். அதன் மேல் திக்காக காய்ச்சிய பாலை ஒரு லேயர் ஊற்றுங்கள். அதன் பிறகு மறுபடியும் இந்த பிரட் துண்டுகளை சின்ன சின்னதாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். மறுபடியும் பாலை ஊற்றுங்கள் இதே போன்று மூன்று லேயர் பிரட்டையும் பாலையும் மாற்றி மாற்றி ஊற்றி வைத்துக் கொள்ளுங்கள்.
இது நன்றாக ஆறிய பிறகு ஃப்ரிட்ஜில் இரண்டு மணி நேரம் வைத்து வரை அப்படியே வைத்து விடுங்கள். இரண்டு மணி நேரம் கழித்து எடுத்து பாருங்கள் அட்டகாசமான ருசியில் ஜில்லுன்னு ரசமலாய் தயார்.




