மட்டன் கீமா பாவ் பாஜி செய்வது எப்படி...

0

 


குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாட் வகை உணவுகள் ஃபேவரட்டாக மாறிவிட்டன. அதில் பாவ் பாஜி மிகவும் சுவையான ஒன்று. பொதுவாக அசைவப் பிரியர்களுக்கு மட்டன் பிடிக்கும். ஆனால் குழந்தைகள் மட்டன் சாப்பிட சிரமப்படுவார்கள். அதனால் மட்டன் கீமாவை வாங்கி, மட்டன் கீமாவை வைத்து பாவ் பாஜி போன்று அவர்களுக்கு சுவையான பிடித்த உணவுகளை செய்து கொடுங்கள். சரி. எவ்வாறு வீட்டிலேயே எப்படி பாவ் பாஜி செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.பாவ் பாஜி இப்போது இந்தியாவில் பிரபலமான ஸ்நாக்ஸ் ஆகிவிட்டது. சைவ உணவு உண்பவர்களுக்கு பாவ் பாஜி சிறந்த ஸ்நாக்ஸ் அதுவே அசைவ உணவு உண்பவர்களுக்கு கீமா பாவ் சிறந்த தேர்வாகும். இதனை மட்டன், சிக்கன் என எவற்றைக் கொண்டும் செய்யலாம். இஞ்சி, பூண்டு, மசாலா வகைகள் அனைத்தும் சேர்த்து அதில் சிக்கன் அல்லது மட்டனை கலந்து செய்வதால் இதன் சுவை அதிகமாகவே இருக்கும். இதனை வெண்ணெய், நெய், சாஸ் உடன் சாப்பிடும்போது அதன் சுவை இன்னும் அதிகரிக்கும். இந்த மட்டன் கீமா பாவ் எவ்வாறு செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.


முக்கிய பொருட்கள்

250 கிராம் ஆட்டிறைச்சி

பிரதான உணவு



1 தேக்கரண்டி இஞ்சி பேஸ்ட்

1 தேக்கரண்டி பூண்டு பேஸ்ட்

2 Numbers நறுக்கிய வெங்காயம்

1 தேக்கரண்டி கரம் மசாலா தூள்

1 தேக்கரண்டி மிளகாய் பொடி

தேவையான அளவு உப்பு

1 Numbers தக்காளி

தேவையான அளவு மஞ்சள்

1 கப் உறைய வைக்கப்பட்ட பட்டாணி

தேவையான அளவு குடை மிளகாய்

6 Numbers பாவ்

வெப்பநிலைக்கேற்ப

1 தேக்கரண்டி சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்

Step 1:

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும். இஞ்சி பூண்டு விழுது, கரம் மசாலா சேர்த்து வெங்காயத்துடன் நன்கு வதக்க வேண்டும்.

Step 2:

பின்பு இத்துடன் கீமா சேர்த்து தண்ணீர் வற்றும்வரை நன்கு வதக்க வேண்டும். அதன்பின் மிளகாய் தூள், பட்டாணி, தக்காளி ஆகியவற்றைச் சேர்க்க வேண்டும். தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.

Step 3:

பின்பு கேப்சிகம் சேர்த்து ஒரு கிளறு கிளற வேண்டும். மேலும் சிறிது உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கீமா கெட்டியாகும் வரை 10-15 நிமிடங்கள் நன்கு வேகவிட வேண்டும். பின்பு கொத்தமல்லி இலைகளைத் தூவி விட வேண்டியதுதான்.

அவ்வளவு தான் அருமையான, சுவையான மட்டன் கீமா பாவ் ரெடி... இதனை மாலை ஸ்நாக்ஸாக சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

Tags

Post a Comment

0Comments
Post a Comment (0)